Saturday, September 25, 2010
மொழி புரிந்து நடிப்பதே சிறந்தது : அசின்
சென்னையில் நடந்து வரும் ‘காவலன்’ ஷூட்டிங்கில் இருக்கும் அசின் கூறியதாவது: டைரக்டர் சித்திக்கின் ரசிகை நான். தமிழில் அவர் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’ மற்றும் சில மலையாள படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.
‘பாடிகார்ட்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கேட்டார். இந்தியில் ‘கஜினி’, ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படங்களில் பிசியாக இருந்ததால், நடிக்க முடியவில்லை. தமிழில் அந்த படம் ‘காவலன்’ பெயரில் ரீமேக் ஆகிறது. சித்திக் டைரக்ஷனில் நடிக்கிறேன். இதற்காக ‘பாடிகார்ட்’ படத்தை பார்த்தேன். அதில் நயன்தாரா ஸ்டைலாக நடித்திருந்தார். விஜய்யுடன் நடித்த ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்கள் ஹிட்டானது. மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி.
இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘ரெடி’ படத்திலும், சில விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கில மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளேன். எல்லா மொழிகளும் புரிந்ததால், ஷூட்டிங்கில் பயமின்றி நடிக்க முடிகிறது. யாராக இருந்தாலும், மொழி தெரிந்து நடிப்பதே சிறந்தது. பாலிவுட்டில் குடியேறியதால், சென்னையை மறந்து விட்டதாக அர்த்தம் இல்லை. அடிக்கடி சென்னை வருகிறேன். ‘காவலன்’ ரிலீசுக்கு பிறகு எனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால், தொடர்ந்து தமிழில் நடிப்பேன்.
Labels:
அசின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment