கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக செய்திகள் பரவின. “பையா” படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி கார்த்தியிடம் கேட்டபோது மறுத்தார்.
நட்பு ரீதியாக பழகியதாகவும், காதல் இல்லை என்றும் கூறினார். தமன்னாவும் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, கார்த்தியுடன் காதல் இல்லை. நாங்கள் காதலிப்பதாக வதந்தி பரப்புகின்றனர். அதை நிறுத்த வேண்டும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டேன். ஷங்கர், கவுதம், பாலா போன்ற திறமையான இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை. என்னை நம்புகிறேன். எனது வேலையை சிறப்பாக செய்கிறேன். நிறைய நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
No comments:
Post a Comment