முதல்- அமைச்சர் கருணா நிதி கதை வசனத்தில் தயாராகும் படம் இளைஞன்.
இதில் கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நமீதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 1940-ம் ஆண்டு கால செட்டுகள் போட்டு படப்பிடிப்பை நடத்து கின்றனர்.
இதில் நடிப்பது பற்றி நமீதா கூறியதாவது:-
முதல்- அமைச்சர் கலைஞர் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாய்ப்பு அளித்த தற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதில் எனக்கு அற்புதமான கேரக்டர், பாதி பிரிட்டீஷ், பாதி இந்தியன் என கலவையான கேரக்டரில் நடிக்கிறேன்.
ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளை பேசியும் எப்போதும் புகை பிடித்துக் கொண்டிருப்பது போலவும் வருகிறேன். ரம்யா கிருஷ்ண னின் நீலாம்பரி கேரக்டரை எனது கதாபாத்திரம் நினைவுபடுத்தும்.
சுரேஷ்கிருஷ்ணா திற மையான இயக்குனர். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்
No comments:
Post a Comment