Thursday, October 14, 2010
சக கலைஞர்களை பாராட்டிய தனுஷ்
தனுஷ் கதாநாயகராக நடிக்க, டைரக்டர் மி்தரன் ஆர்.ஜவஹர் மூன்றாவதாக இயக்கி இருக்கும் படம் உத்தமபுத்திரன். ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி
என இரண்டு படங்களில் இணைந்த தனுஷ் – மித்ரன் கூட்டணி, இந்த படத்தையும் வெற்றி பெற்ற ஒரு தெலுங்கு படத்தின் ரீ-மேக்காகவே உருவாக்கி இருக்கிறது.
ரெடி எனும் பெயரில் தெலுங்கில் சக்கைபோடு போட்ட படத்தின் தமிழ் ரீ-மேக்கான உத்தமபுத்திரனின் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஜெனிலியாதான் தெலுங்கு பதிப்பிலும் நாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெடி தெலுங்கு படத்தில் நடித்த ஜெனிலியா, உத்தமபுத்திரன் படத்திலும் தானே கதாநாயகியாக நடிக்க ஆர்வமாக ஒப்புக் கொண்டதோடு பாலிவுட்டில் தற்போது தான் பிஸியாக இருந்த நிலையிலும் உத்தமபுத்திரன் படத்திற்கு உடனடியாக கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார் என்பது ஹைலைட். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், படத்தில் நடித்த மற்ற கலைஞர்களையும் மேடைக்கு ஏற்றி அறிமுகப்படுத்தி, அவர்களின் நடிப்பை பாராட்டினார். அப்போது பேசிய அவர், “படத்தில் நான் ஹீரோ என்றாலும். இன்றைக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் ஹீரோ. படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். முதலில் இரண்டு பாடல்களை உடனே கொடுத்த விஜய் ஆண்டனி, பிறகு ஹீரோவாக நடிக்க போய்ட்டாரு. மற்ற பாடல்களை வாங்க… ஒரு ஹீரோ கிட்ட பாடல்களுக்காக நின்ற ஒரு ஹீரோ நானாகத்தான் இருப்பேன். இருப்பினும் பகலில் ஹீரோவாகவும், இரவில் இசையமைப்பாளராகவும் இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி” என்று பாராட்டினார்.
உத்தமபுத்திரன் படத்தையும், படத்தில் நாயகனாக நடித்த தனுஷையும் பலரும் பாராட்டி பேசினார்கள். ஆனால் தனுஷோ… அன்றைய விழா நாயகனான இசையமைப்பாளரை பாராட்டியதோடு, படத்தில் தன்னுடன் நடித்த சக கலைஞர்களை மேடையேற்றி கவுரவித்தது புதுமையாகவும், தனுஷ் மீதான மரியாதையை உயர்த்தும் விதத்திலும் இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment