'காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போவதில்லை!' அந்தகாலத்து ஆர்
சுந்தர்ராஜன் படத்தின் 'என்ட் கார்டு' போல இருக்கும் இந்த வசனங்கள், 'அந்த' நடிகை அனுப்பிய எஸ்எம்எஸ்தான்! அது மட்டுமல்ல. இதுபோல தத்துவ முத்துக்கள் தெறிக்கும் எஸ்எம்எஸ்களை தனக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரிய ஒரு சில திரையுலக நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார் அவர். லேட்டஸ்ட்டாக வந்த இன்னொரு தத்துவம் இது. 'ஐ லவ் யூ. இது கேள்வியல்ல. ஆனால் பதிலை எதிர்பார்க்கும்'கடந்த சில வாரங்களாகவே பெரும் மன உளைச்சலில் இருக்கிறார் அவர். அதனால்தான் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இப்படி மெசேஜ்கள் அனுப்பி வருகிறார் என்கிறது அவரை தொடர்ந்து கவனித்து வரும் ஃபிரண்ட்ஷிப் வட்டாரம்.
தனது காதல் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர், கோர்ட் வழக்கு என்றானதும் அவரை கூப்பிட்டு சொன்னாராம். "உங்களுக்கு ஏப்ரல் வரைக்கும் டைம். அதுக்குள்ளே இந்த பிரச்சனை தீரலைன்னா அவங்கவங்க வழிய அவங்கவங்க பார்க்கறதுதான் நல்லது".
இப்படி ஒரு அதிரடி முடிவை எதிர்பார்க்காத 'அவர்' கண்கலங்கி நிற்கிறாராம். இன்னுமா புரியல இந்த ஜோடி எது என்று!
No comments:
Post a Comment