
ரஜினிகாந்த் நடித்து செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது எந்திரன் படம். இது இயக்குநர் ஷங்கரின் கனவுப்படம். 150 கோடி பட்ஜெட்டில்
கலாநிதிமாறன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
’எந்திரன் சினிமா என் 10 வருட கனவு’ என்று ஷங்கர் சொல்லிவருகிறார். அமரர் எழுத்தாளர் சுஜாதா இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். தீய சக்திகளை அழிக்க விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜியை உருவாக்குவது மாதிரி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் ஷங்கர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரும் பட்ஜெட் படமான எந்திரன் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீசாகவிருக்கிறது. ஐஸ்வர்யாராய் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப்படம் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.
‘நவீன ஊடகம்’பத்திரிகை நடத்திவரும் இளங்கோவன், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எந்திரன் படத்திற்கு தடை கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ’’கட்ந்த 2000ம் வருடத்தில் ஆனந்த விகடன் இதழில் எந்திரன் பற்றி கவிதை எழுதினேன். பிறகு அதே ஆனந்த விகடனில் எந்திரன் பற்றி சிறுகதை எழுதினேன். இவை இரண்டையும் அடிப்படையாக வைத்துதான் எந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
என் அனுமதி இல்லாமல் என் கதையை திருடிவிட்டார்கள். எனவே, எந்திரன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’என்று கூறியுள்ளார். இந்த மனு இன்று அல்லது நாளை நீதிபதியின் முன் விசாரணைக்கு வரவிருக்கிறது.
No comments:
Post a Comment