இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்' படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம், ‘எந்திரன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ள ‘எந்திரன்’ படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ‘எந்திரன்’ படத்திற்கு 2,000 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்போம் என்றும் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா தெரிவித்துள்ளார்.
Friday, September 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment