Wednesday, September 15, 2010
45 நடிகர்கள் பங்கேற்ற பாடல் காட்சி
பாண்டிநாடு தியேட்டர்ஸ் தயாரிக்கும் ‘முத்துக்கு முத்தாக’ படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. படத்தை இயக்கும் ராசு மதுரவன் கூறியதாவது: ஹரீஷ்-ஓவியா, விக்ராந்த்-மோனிகா, இளவரசு-சரண்யா
ஜோடியுடன் நட்ராஜ், வீரசமர், பிரகாஷ், சிங்கம்புலி, ரகுவண்ணன் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் நடிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல் மற்றும் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, கவிபெரியதம்பியின் இசையில் உருவான பாடல்கள் படத்துக்கு பெரிய பலம். ஒரு பாடல் காட்சியில், 45 நட்சத்திரங்கள் தனித்தனி கெட்டப்பில் தோன்றி நடித்துள்ளனர். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அற்புதமான குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் கதையுடன் படம் உருவாகிறது. இம்மாதம் ஷூட்டிங் முடிந்துவிடும். அடுத்த மாதம் பாடல் வெளியிடப்படுகிறது.
Labels:
சினி நியூஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment