Wednesday, September 15, 2010
5 கெட்அப்பில் அர்ஜுன்
அர்ஜுன் நடிக்கும் ‘வல்லக்கோட்டை’ படத்தை இயக்கி வருகிறார் வெங்கடேஷ். படம் பற்றி வெங்கடேஷ் சொன்னது: இந்த படத்தில் 5
கெட்அப்பில் அர்ஜுன் நடிக்கிறார். கறுப்பான தொழிலாளி வேடம் முக்கியமானது. ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் கறுப்பு நிற கெட்அப்பில் நடித்திருப்பார். அது போல இந்த வேடமும் முக்கியமானதாக இருக்கும். அடுத்து, ஆஞ்சநேயர் கெட்அப், சிவப்பு இந்தியன் உள்ளிட்ட கேரக்டர்களில் அவர் வருவார்.
சமீபத்தில் பின்னி மில்லில் சண்டை காட்சிக்கு ஏற்பாடு செய்து தயாராக இருந்தோம். அப்போதுதான் முரளி மறைந்த செய்தி வந்தது. உடனடியாக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டோம். பின் அந்த சண்டை காட்சியை இரண்டு நாட்கள் படமாக்கினோம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது. அக்டோபர் மாதம் ரிலீஸ். இதையடுத்து மீண்டும் அர்ஜுன் நடிக்கும் படம் இயக்க உள்ளேன்.
Labels:
அர்ஜுன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment