கடவுள் நல்ல காதலனை கண்டுபிடித்து தருவார் என்று பிரியங்கா சோப்ரா கூறினார். பிரியங்கா சோப்ரா, ஷாகித் கபூரை காதலித்து வருவதாக
பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி பிரியங்கா கூறியதாவது: நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. நல்ல படங்களை எனக்கு கடவுள் தந்திருக்கிறார். நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை என்றே நம்புகிறேன். நல்ல காதலனை, கணவனை அவர் கண்டுபிடித்து தருவார். நான் யாரையும் இப்போது காதலிக்கவில்லை. ஷாகித்தை பற்றி கேட்கிறார்கள். என் நடிப்பை, நான் நடிக்கும் படங்கள் பற்றி மட்டும் நான் பேச நினைக்கிறேன். எனது தனிப்பட்ட விஷயங்கள் மற்றவர்களுக்கு தேவையில்லாதது. மீடியாவுக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. அது உங்கள் உரிமை என்றால் பதில் சொல்லாமல் இருக்க எனக்கு உரிமை இருக்கிறது. இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.
No comments:
Post a Comment