சல்மான் கான் நடித்த ‘தபாங்’ திரைப்படம் கடந்த வாரம் 10ந் தேதி வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரே வாரத்தில் மட்டும் ரூ.48
கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. அமீர்கானின் 3 இடியேட்ஸ் படம் ரூ.41 கோடி(ஒரு வாரத்தில்) வசூல் செய்தது. தற்போது 3 இடியேட்ஸ் படத்தின் சாதனையை சல்மானின் ‘தபாங்’ முறியடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் சல்மான் ஆக்ஷன் ப்ளஸ் நக்கல் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். சல்மானின் ரசிகர்கள் ‘தபாங்’ படம், 200 சதவீதம் திருப்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் தபாங் செம ஹிட் ஆகியுள்ளது.
No comments:
Post a Comment