Thursday, September 16, 2010

பெண்ணாக மாறுகிறார் மந்திரா பேடி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அழகிய இந்தியப் பெண்ணாக மாற முடிவு செய்துள்ளாராம் மந்திரா பேடி.
முதல் வேலையாக தலைமுடியை நீளமாக வளர்க்க அவர்
முடிவெடுத்துள்ளார். டிவி நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் சிறுசிறு வேடங்களில் சினிமாவில் நடித்து வந்த மந்திரா பேடி, 2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்னணையாளராக வந்து உட்கார்ந்தபோது அனைவரும் அதிசயித்துப் பார்த்தனர்- மந்திராவை அல்ல, அவர் போட்டு வந்த அட்டகாசமான ஜாக்கெட் ஸ்டைல்களை.
எப்போது அறுந்து விழுமோ என்று கூறும் அளவுக்கு மெல்லிய ஸ்டிராப்புகளுடன் கூடிய பிளவுஸ்களில், வித்தியாசமான சேலை அலங்காரங்களில் கவர்ச்சிகரமாக வந்த மந்திரா அதன் பின்னர் மிகப் பெரிய அளவுக்கு பாப்புலர் ஆனார். அந்தப் புகழுக்குப் பிறகு ஆளே மாறிப் போனார் மந்திரா. தனது அழகிய தலைமுடியை வெட்டி எறிந்த மந்திரா, விதம் விதமான ஹேர் ஸ்டைல்களில் கலக்கினார். விதம் விதமான பேஷன் உடைகளுக்கு மாறினார். உடலையும் ஸ்லிம்மாக்கி இளம் வயதுப் பெண் போல தன்னைக் காட்டிக் கொண்டார்.
ஆனால் மந்திரா மீதான கிரேஸ் தற்போது வெகுவாக குறைந்து போய் விட்டது. இதனால் கிரிக்கெட் உலகிலும் இப்போது அவரை யாரும் சீண்டுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் நீளமான அழகிய தலைமுடியுடன் கூடிய அழகுப் பெண்ணாகப் போகிறாராம் மந்திரா. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தோற்றப் பொலிவுக்காக நான் நிறைய மாற்றங்களை செய்து பார்த்து விட்டேன். இப்போது மீண்டும் எனது தலைமுடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்துள்ளேன். இடையில் மேற்கொண்டிருந்த சில ஹேர் ஸ்டைல்களால் எனது தலைமுடி பக்கவாட்டில் வளர ஆரம்பித்து விட்டது. எனவே கீழ் நோக்கி வளர சில காலமாகும். இருப்பினும் நிச்சயம் மீண்டும் எனது நீளமான தலைமுடியைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார் மந்திரா.

No comments:

Post a Comment