Saturday, September 18, 2010

சீதாவின் கல்யாணம் பார்த்திபனின் வாழ்த்து


டைவர்சும் டைவர்சுக்கு பின்பான வாழ்க்கையும் அவரவர் அனுபவத்திற்குட்பட்டது. ஆனால் இதை வேடிக்கையாகவும் காயப்படுத்தியும் பார்ப்பது சமுதாயத்தின் கேவலமான விளையாட்டுகளில் ஒன்று. பிரபுதேவா
விவகாரத்தை போலவே சீதாவின் மற்றொரு காதலும் இப்படிதான் பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தன் காதலரான சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டார் என்று சீதா குறித்து ஒரு செய்தி. இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக அத்துமீறிய செய்தி தாள் ஒன்று அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி கவலைப்பட்டது.
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதை போல எங்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. சதீஷுக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்ததும் எங்கள் கல்யாணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார் சீதா.
இதற்கிடையில் இந்தக் காதலையும் திருமணத்தையும் பற்றி தனது கருத்தை கூறியிருக்கிறார் பார்த்திபன். சீதாவின் முன்னாள் கணவர். மனமும் மகிழ்வும் இணைவதுதான் பேரின்பம். அந்த பேரானந்தத்தை அடையதான் அனைவரும் போராடுகிறோம். அந்த பேரின்ப பெருவிழா, யாருக்கு எதன் மூலம் நிகழ்ந்தாலும் அவர்களை உளமார வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார் அவர்.

No comments:

Post a Comment