Tuesday, October 12, 2010
படத்தில் நடிக்க போகிறார் ஏ.ஆர்.ரகுமான்
இசைத்துறையில் கலக்கிய இசைப்புயல், தற்போது நடிப்பு புயலாக மறப்போகிறது. ஆமாம், இசைப்புயல்
ஏ.ஆர்.ரகுமான் மலையாளப் படத்தில் நடிக்க போகிறார். அவரை நடிக்க வைப்பதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர் மலையாளப் படவுலகினர். ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான். இந்தப் படத்தில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு துப்பறியும் கதை. வழக்கம் போல துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். தயங்கித் தயங்கி கேட்டிருக்கிறார்கள். ஒருநாள் கால்ஷீட் போதும், அதுவும் வீட்டிலேயே ஷூட்டிங் என்றதும் ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்.
Labels:
ரகுமான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment