நடிகை ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்ததாக வெளியான தகவலை நடிகை அசின் மறுத்துள்ளார். இதுபற்றி அசின் கூறியதாவது:சென்னையில் காவல் காதல் பட
ஷூட்டிங்கில் விஜய்யுடன் நடித்து வருகிறேன். இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு, ஸ்ரீதேவி & போனிகபூர் தயாரிக்கும் படத்தஞில் என்னை நடிக்க கேட்டதாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தி சினிமாவுக்கு வந்த புதிதில் மும்பையிலஙி எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அப்போது எனக்கு ஆதரவாக இருந்தது ஸ்ரீதேவியும் அவரது கணவரும்தான். அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டில்தான் நானும் குடிபோனேன். எனக்கு பல விதத்திலும் அவர்கள் உதவியாக இருந்தனர். ஒரு குடும்பம் போலவே நாங்கள் பழகினோம். அந்த அளவுக்கு போனிகபூர்,
ஸ்ரீதேவி என் மீது பாசத்துடன் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்கள் ஒரு படத்தில் நடிக்க கேட்டால், நான் மறுக்க முடியுமா? அப்படி ஒரு வாய்ப்பே எனக்கு வரவில்லை. ஏன்தான் என்னைப் பற்றி இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்கள் என தெரியவில்லை.
இவ்வாறு அசின் கூறினார்.போனிகபூர் கூறும்போது, பி பாசிட்டிவ், மிஸ்டர் இந்தியா 2 ஆகிய இரண்டு படங்களுக்கான கதை டிஸ்கஷனில் இருக்கிறேன். கதை முழுமை அடைந்தால்தான் அதில் நடிப்பவர்களை தேர்வு செய்வேன். எனவே நடிப்பவர்களை பற்றி எதுவுமே முடிவு செய்யாதபோது, அசினிடம் காலஙிஷீட் கேட்டதாக சொல்வதில் உண்மையில்லைது’ என்றார்.
No comments:
Post a Comment