Tuesday, September 7, 2010

சினிமா, டான்ஸ்தான் வாழ்க்கை கமல் மகள் பரபரப்பு பேட்டி


‘சினிமாவுக்கு வருவேன். திரைக்கு பின்னால்தான் பணியாற்றுவேன். நடிக்க மாட்டேன்’ என்று கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா
கூறினார்.நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இசை அமைத்ததுடன் ‘லக்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். ‘7ம் அறிவு’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கையும், கமலின் இரண்டாவது மகளுமான அக்ஷரா, நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் சென்னையில் அளித்த பேட்டி:
கடந்த 9 மாதத்துக்கு முன் மும்பை சென்றுவிட்டேன். என் குருநாதர் கவுதம்&கோகிலா ஏற்பாடு செய்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். சென்னையை ரொம்பவே மிஸ் செய்கிறேன். இங்கிருக்கும்போது ஆங்கிலத்தில் பேசினாலும், தமிழில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. மும்பையில் அந்த வாய்ப்பு இல்லை. பலவகை நடனம் கற்றிருக்கிறேன்.
இதில் சாதிப்பதே என் குறிக்கோள். ஹிப்&ஹாப் நடனம் மிகவும் பிடிக்கும். குச்சுப்புடி, பரதநாட்டியமும் கற்றிருக்கிறேன். இதை மேடையில் ஆட மாட்டேன். இந்தியில் ‘சொசைட்டி’ படத்தை இயக்கும் ராகுல் தோல்கியாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். எனது அம்மா சரிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சினிமா சம்பந்தமாக எந்த படிப்பும் படிக்கவில்லை. உழைப்பின் மூலமே அதை அறிய விரும்புகிறேன். ஏற்கனவே நண்பர்களுடன் சேர்ந்து 3 விளம்பர படம் இயக்கி உள்ளேன். எப்போதாவது சோர்வாக உணர்ந்தால் அம்மா, அப்பாவிடம் பேசுவேன். நானும் ஸ்ருதியும் சகோதரிகள் மட்டுமல்ல.. நெருங்கிய தோழிகள்போல் பழகுவோம்.
நடிப்பில் எனக்கு விருப்பமில்லை. கேமராவுக்கு பின்னாலிருந்து வியக்கத்தக்க படங்கள் இயக்குவேன். நடனம், சினிமா இந்த இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அப்பாவை இயக்கும் ஆசையும் எனக்கு உண்டு. அவருக்காக ஒரு கதாபாத்திரத்தை நான் உருவாக்குவது கடினம். ஏதோ ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வேண்டும் என்று என்னால் அவரிடம் சொல்ல முடியாது.
இவ்வாறு அக்ஷரா கூறினார்.

No comments:

Post a Comment