Saturday, September 18, 2010
கொள்கையை மாற்றிய த்ரிஷா
மாஸ் ஹீரோவின் படத்தில் கதாநாயகி அந்தஸ்துடன் சும்மா வந்துப் போவதும் த்ரிஷாவுக்கு உடன்பாடுதான். ஆனால் படம் முழுக்க வரும்
ஹீரோயின் ஓரியண்ட் சப்ஜெக்ட் என்றால், கதையை கேட்காமலே கதவை சாத்திவிடுவார்.மற்ற படங்கள் தோல்வி அடைந்தாலும் அது பெரிய அளவில் ஹீரோயினை பாதிக்காது. ஹீரோயின் ஓரியண்ட் படம் என்றால் மொத்த தோல்வியையும் நாமே சுமக்க வேண்டி வரும் என்று இதற்கு விளக்கமும் கூறியிருந்தார் த்ரிஷா.
அருந்ததி அனுஷ்காவை ஒரே நாளில் உச்சத்தில் வைத்ததாலா தெரியவில்லை த்ரிஷாவும் தனது கொள்கையை தளர்த்தி ஹீரோயின் ஓரியண்ட் படத்தில் நடிக்க முன் வந்திருக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை எம்.எஸ்.ராஜு தயாரிக்கிறார்.
Labels:
திரிஷா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment