Showing posts with label ஆமிர்கான். Show all posts
Showing posts with label ஆமிர்கான். Show all posts

Friday, September 24, 2010

இந்திய சினிமா மாறி வருகிறது : ஆமிர்கான்!


இந்திய சினிமா இப்போது மாற்றமடைந்து வருகிறது என்றார் அமிர்கான். ஆமிர்கானின் ‘3 இடியட்ஸ்’, ‘பீப்லி லைவ்’ படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து ஆமிர்கான் கூறியதாவது: இந்திய சினிமா மாற்றமடைந்து வருகிறது. ரசிகர்கள்
புதிய கதைகளை வரவேற்க தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க முடியாது. வித்தியாசமான கதைகளையும் படங்களையும் ரசிகர்கள் விரும்புவதை வரவேற்கிறேன். நான் தயாரித்துள்ள ‘பீப்லி லைவ்’ லண்டனில் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தியாவில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அனுஷா ரிஷ்வி இயக்கியுள்ள முதல் படம் இது. கதையை சினிமாவாக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வாறு ஆமிர்கான் கூறினார்.