Showing posts with label ஆர்யா. Show all posts
Showing posts with label ஆர்யா. Show all posts
Tuesday, October 5, 2010
ஆர்யாவின் கதவை தட்டும் இயக்குனர்
'உள்ளம் கேட்குமே' படத்தில் அறிமுகமான ஆர்யாவுக்கு 'நான் கடவுள்' படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம், தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும்
தற்போது ஆர்யா வீட்டிற்கு படை எடுத்துள்ளனர். நான் கடவுள் படத்தில் ஆக்ஷன் காட்சியில் அசத்திய ஆர்யா, 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் காமெடியுலும் அசத்தினார். பாலா, லிங்குசாமி, அடுத்து மிஷ்கின்... இன்றைய தேதியில் கேரியர் கிராஃப் பிரைட்டாக இருப்பது ஆர்யாவுக்குதான். யுத்தம் செய் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் மிஷ்கின். இந்தப் படத்தில் நடிக்க மிஷ்கினின் தேர்வு ஆர்யா. லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடிக்கும் ஆர்யாவிடம் ஒன் லைன் ஒன்றை கூறியிருக்கிறார் மிஷ்கின். ஒன் லைன் ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துள்ளது.
Wednesday, September 29, 2010
காமெடிக் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ஆர்யா
பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப் படமாகியுள்ளதால் குஷியாகியுள்ள ஆர்யா, காமெடியில் மீண்டும் கலக்க முடிவு செய்துள்ளார். அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட் Photos
வெற்றிகரமான காமெடிக் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ஆர்யா, மீண்டும் ஒரு காமெடிப் படத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தையும் பாஸ் என்கிற பாஸ்கரனை இயக்கிய ராஜேஷே இயக்கவுள்ளார். விரைவில் நாயகியை தீர்மானிக்கவுள்ளனராம்.
Saturday, September 18, 2010
ஆர்யாவுக்காக தள்ளிப்போன எந்திரன் ரிலீஸ் வெளிவராத தகவல்கள்
செப்டம்பர் 24 ந் தேதி வெளிவர வேண்டிய எந்திரன் அக்டோபர் 1 ந் தேதிதான் வெளிவருகிறது. இந்த ஒரு வார தள்ளிப் போடலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிற முக்கியமான காரணம்
வேறொன்று. அது? அதற்கு முன்னால் ஒரு கேள்வியும் பதிலும் ரொம்ப ரொம்ப அவசியமாகிறது இந்த இடத்தில்! சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்யாவிடம், பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இன்னும் சில வாரங்களில் எந்திரன் வந்துவிடும். நீங்க எந்திரன் வந்தபின் ஒரு மாதம் கழிச்சி ரிலீஸ் பண்ணியிருந்தா நல்லாயிருக்குமே? எந்திரன் வந்தால் பாஸ்கரனின் கதி....? என்று கேள்வி எழுப்பப்பட,
"வந்தா என்ன பண்றது. அவ்ளோதான் நம்ப படம்" என்றார் ஆர்யா. சிரித்துக் கொண்டே அவர் சொன்னாலும், ரொம்ப வருஷம் கழிச்சு எனக்கொரு வெற்றி கிடைச்சுருக்கு. அதை அவ்வளவு சீக்கிரமா பொலி போடணுமா என்ற வேதனை மறைந்து கிடந்தது அந்த பதிலில். இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசனாக இருந்தாலும், உலகம் முழுக்க படத்தை வெளியிட்டிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயன்ட் மூவிஸ்தான். நல்லா போற படத்தை பொலி போடணுமா என்ற கேள்வி அவர் மனதிலும் எழுந்ததாக கூறப்படுகிறது.
எந்திரன் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இவருக்கும் ஒரு புரிந்துணர்வு பேச்சு வார்த்தை நடந்ததாகவும் அதையடுத்துதான் எந்திரன் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாகவும் பேச்சு. எது எப்படியோ? ஒண்ணாந்தேதி திருவிழாவுக்கு உலகமே ரெடி!
Thursday, September 16, 2010
பூஜா, நிலாவுடன் காதல்; ஆர்யா
ஆர்யாவையும் பூஜாவையும் இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நிலாவை காதலிப்பதாகவும் பேசப்பட்டது. இதுபற்றி ஆர்யாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
பூஜா, நிலாவுடன் காதல் என்பதெல்லாம் தவறானவை. இதுவரை யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. நயன்தாராவுக்கு தனியாக பிறந்தநாள் விருந்து அளித்ததாகவும் செய்தி வந்தன. அதிலும் உண்மை இல்லை. அந்த விருந்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவருடன் நான் இணைந்து நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறந்த காமெடி படமாக இது வந்துள்ளது. இதில் நயன்தாரா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்ல இயலாது. நேரம் அமையும் போது நடக்கும். எனது ராசியில் காதல் திருமணம் என்று உள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்.
“ஷோ பீப்பிள்” என்ற படக்கம்பெனி தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். புதுமுகங்களை வைத்து “படித்துறை” என்ற படத்தை எடுக்கிறேன். நான் நடிக்கும், இயக்குனர் பாலாவின் “அவன் இவன்” படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. வில்லன் வேடத்திலும் நடிக்க தயார்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்ல இயலாது. நேரம் அமையும் போது நடக்கும். எனது ராசியில் காதல் திருமணம் என்று உள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்.
“ஷோ பீப்பிள்” என்ற படக்கம்பெனி தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். புதுமுகங்களை வைத்து “படித்துறை” என்ற படத்தை எடுக்கிறேன். நான் நடிக்கும், இயக்குனர் பாலாவின் “அவன் இவன்” படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. வில்லன் வேடத்திலும் நடிக்க தயார்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.
Saturday, August 28, 2010
கை மாறிய ஆர்யா படம்
குவார்ட்டரும், குபீர் சிரிப்புமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்து புரட்டிப்போட்ட படம் எஸ்எம்எஸ். அப்படத்தின் டைரக்டர் ராஜேஷ் இயக்குகிற படம்தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்திலும் ராஜேஷின்
'பல் வைத்தியம்'தான் ஃபேமஸ் என்கிறது படக்குழு. 32 ம் சுளுக்கிக் கொள்கிற மாதிரி எடுத்திருக்கிறாராம். ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை நான் கடவுள் படத்தை தயாரித்த கே.எஸ்.ஸ்ரீநிவாசன்தான் தயாரிக்கிறார். படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சம்பளம் பேசலாம்னு ஆரம்பிச்சோம். அப்புறம் பார்த்துக்கலாம்னு சொன்னார் ஆர்யா. அப்புறம் ஷ§ட்டிங் நடக்கும் போது ஒரு முறை கேட்டோம். பிறகு பேசலாம்னு சொல்லிட்டார். முடியுற நேரத்தில பெரிய சம்பளமா கேட்டா சிக்கல் வருமே என்று மறுபடியும் அவரிடம் பேசினோம். அப்பவும் அவர் பிடிகொடுக்கவில்லை. இந்த படம் முடிஞ்சதும் ஒரு நாள் அவரே இந்த படத்துக்கு ஒரு விலை சொல்லுங்க. நானே வாங்கி ரிலீஸ் பண்ணிக்கிறேன் என்றார். வழக்கமா தயாரிப்பாளர்தான் ஹீரோவுக்கு பணம் கொடுப்பார். ஒரு வித்தியாசமா இந்த படம் முடிஞ்சதும் அவர்தான் எங்களுக்கு பணம் கொடுக்கிறார் என்றார் ஸ்ரீநிவாசன். இப்போது இந்தப்படம் ஆர்யாவிடமிருந்து கைமாறி உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிறார்.
தொடர்ந்து என்னோட நாலு பர்த்டேவையும் நான் ஸ்ரீநிவாசன் சாரோடதான் கொண்டாடிகிட்டு இருக்கேன். மூன்று வருஷமா நான் கடவுள் படப்பிடிப்புல கொண்டாடுனோம். அவருகூட நினைச்சிருப்பாரு. என்னடா, படம் மட்டும் வளரவே மாட்டேங்குது. நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு ஆர்யா மட்டும் நல்லா வளர்ந்துகிட்டே வர்றாரேன்னு. ஒரு வழியா அந்த படத்தை முடிச்சு வெளியிட்டாரு. நாலாவது வருஷம் பாஸ் என்கிற பாஸ்கரன் ஷ§ட்டிங்ல கொண்டாடுனோம். இந்த படத்தின் டைரக்டர் ராஜேஷ் ரொம்ப கூல் டைப். எதுக்கும் அலட்டிக்கவே மாட்டார். கும்பகோணத்துல ஷ§ட் பண்ணிகிட்டு இருந்தோம். கடைசி நாள் ஷ§ட்டிங். நயன்தாரா கால்ஷீட் அன்னையோட முடியுது. ஆனா கேமிரா வொர்க் பண்ணல. நாங்க எல்லாம் பதறி போயிட்டோம். ஆனா அவரு கவலையே படல. அப்டியான்னு கேட்டுட்டு அலட்டிக்காம இருக்காரு. நல்லவேளையா தனுஷ் பட ஷ§ட்டிங் பக்கத்துலேயே நடந்துகிட்டு இருந்திச்சு. அங்கிருந்த ஒரு ஸ்டடி கேம் கேமிராவை வச்சு அன்றைய ஷ§ட்டிங்கை முடிச்சோம் என்று ஜாலியாக பேசிக் கொண்டே போனார்.
எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா! – சூர்யா
தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிக்காத நடிகர் ஆர்யாதான் என்றார் நடிகர் சூர்யா .சென்னையில் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில்
பங்கேற்ற அவர் பேசுகையில், “எனக்கு தமிழில் பிடிக்காத நடிகர் ஆர்யாதான். நான் இப்படிச் சொல்லக் காரணம் உண்டு.
என் வீட்டில் எல்லோரும் அமர்ந்து டிவி பார்க்கும் போது திடீரென்று பாடல் காட்சிகளில் ஆர்யாவின் சீன் வந்துவிட்டால் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி, ‘இந்தப் பையன் நல்லா அழகா இருக்கான்ல… நல்லா நடிக்கிறான்’ என்று சொல்வார்கள். எனக்கு காதில் புகையே வரும்… அந்த அளவு கவர்ந்திருக்கார் எல்லோரையும்”, என்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகியான நயன்தாரா வரவில்லை. இதுபற்றிக் குறிப்பிட்ட ஆர்யா, “நயன்தாரா இந்த விழாவுக்கு வராதது வருத்தமாக உள்ளது. இந்த மாதிரி ஆடியோ பங்ஷனுக்கு வர்றதில்லேன்னு அவங்க ஒரு பாலிஸிசே வச்சிருக்காங்களாம். அதான் வரலை… நமக்குத்தான் அந்த மாதிரி எந்தப் பாலிஸியும் இல்லை”, என்றால் கிண்டலாக.
Subscribe to:
Posts (Atom)