Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Tuesday, October 5, 2010

கமல் வழியில் தொடரும் சிம்பு


பெரிய நடிகர்கள் செய்தால் அர்ப்பணிப்பு. அதுவே அறிமுகமாகிறவர்கள் செய்தால் ஆர்வக் கோளாறு. திரையுலகில் எல்லா விஷயத்திற்கும் இதே
அளவுகோல்தான். இதோ இரண்டு 'அர்ப்பணிப்புகள்' நம் கண்ணெதிரே.
மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடல் தவிர மற்ற எல்லா பாடல்களையும் கமலே எழுதிவிட்டார். டைரக்டர்களில் பேரரசு உள்ளிட்ட பலரும் தங்கள் படங்களுக்கு தாங்களே பாடல்களை எழுதிவிடுகிறார்கள். பாடலாசிரியர்கள் சங்கம் பரவால்லன்னு விடுறதாலதான் இப்படியெல்லாம் நடக்குதோ என்னவோ? போகட்டும்... கமல்ஹாசனை தொடர்ந்து இப்போது சிம்புவும் பாடல் எழுத வந்துவிட்டார்.
இவரும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து விட்டால் மெட்டு ஹிட்டாகும். ஹிட் துட்டாகும் என்பது ஊர் உலகமே அறிந்த நல்ல விஷயம்தான். இவரது இசையில் பல பாடல்களை பாடியிருக்கும் சிம்பு இப்போது ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். அதன் பல்லவியை கேட்டால் அப்படியே ஆடிப் போயிருவீங்க!

Anushka,simbu New Film Vaanam Hot Images

எவன்டி உன்னை பெத்தான், பெத்தாள்...
கையில கிடைச்சா செத்தான், செத்தாள்...
இப்படி போவுது பாட்டு. படம் வந்தால் ஊரே ஒண்ணு கூடி உரல் இடிக்கும்னு இப்பவே ஆரூடம் சொல்லுது கோடம்பாக்கம்.

Sunday, October 3, 2010

வேட்டை மன்னனா? குழப்பத்தில் தமன்னா ???


விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, டைரக்டர் லி்ஙகுசாமி இயக்கத்தில் வே‌ட்டை படத்தில் நடிப்பதாய் இருந்தது.
கதாநாயகியாக தமன்னாவை போட வேண்டும் என சிம்பு விரும்பியதும், கடைசியில் வேட்டை படமே சிம்பு கையை விட்டு நழுவிப் போனதும் தெரிந்த சங்கதிதான்.
இலவச Magazine  Total Film Magazine November
  டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



வேட்டை நழுவிய கையோடு லிங்குசாமியை வசைபாடி அறிக்கை விட்டதுடன், வேட்டை மன்னன் என்ற பெயரில் புதுப்படத்தில் நடிக்கப்போவதாக அவசர அறிவி‌ப்பையும் சிம்பு சமீபத்தில் வெளியிட்டார்.
இப்போது வேட்டை விவகாரம் வேரு ரூபத்தில் வேறு நபரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவர்தான் தமன்னா.
லிங்குசாமி எடுக்கும் வேட்டை படத்தில் நாயகன் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது வேட்டை மன்னன் படத்திலும் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார் சிம்பு. முதலில் வருவது வேட்டையா, வேட்டை மன்னனா? என்ற குழப்பத்தில் இருக்கும் தமன்னா, வேட்டை மன்னனுக்கு கால்ஷீட் கொடுக்கவா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.
தமன்னாவை வேட்டை மன்னன், வேட்டையாடாமல் இருப்பாரா என்ன?
தமன்னாவின் காற்றுள்ள‌போதே தூற்றிக் கொள் என்ற பாலிஸியை தெரிந்து கொண்ட சிம்பு, எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறேன்… என்கிற ரீதியில் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம்.

Friday, September 24, 2010

லிங்குசாமிக்கு சிம்புவின் பதிலடி!


தான் நடிக்கவிருந்த வேட்டை படத்தில் ஆர்யாவை நாயகனாக்கிய லிங்குசாமிக்கு பதிலடி தரும் விதத்தில் தனது புதிய படத்துக்கு வேட்டை மன்னன் என்று பெயர் சூட்டியுள்ளார் சிம்பு என்கிற எஸ்.டி.ஆர்!

லிங்குசாமி நேற்று அறிவித்த வேட்டை படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் சிலம்பரசன். ஆனால் லிங்குவும் சிம்புவும் படம் துவங்கும் முன்பே முட்டிக் கொண்டனர்.

விளைவு, அந்தப் படத்திலிருந்து சிம்பு வெளியேற, ஆர்யா நாயகனானார்.இப்போது தனது புதிய படத்தை அறிவித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்துக்கு வேட்டை மன்னன் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தத் தலைப்பு ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என நம்புகிறேன். காரணம், 'மன்னன்' என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத் தலைப்பு. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் இது. புதிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிறது. எனது நண்பர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்' என்றார்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் வேட்டை மன்னனில் மூன்று நாயகிகள். இவர்களில் ஒருவர் ஹாலிவுட்டிலிருந்து அழைத்துவரப்படுகிறாராம்.

சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டன்ட் குழு கவனிக்கிறது.