Showing posts with label சோனியா அகர்வால். Show all posts
Showing posts with label சோனியா அகர்வால். Show all posts
Saturday, October 30, 2010
செல்வராகவனுடன் இருக்க ஆசை : சோனியா
காதல் திருமணம் செய்து கொண்டு, பின் கருத்து வேறுபாடு காரணமாக
விவாகரத்தான திரையுலக ஜோடிகளில் சோனியா அகர்வாலும், டைரக்டர் செல்வராகவனும் ஒருவர். விவாரத்திற்கு பிறகு தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புக்களுக்கும் ஓ.கே சொல்லி வருகிறார். தனது முன்னாள் கணவர் குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், செல்வராகவனுடன் நல்ல நட்புறவுடன் எப்போதும் இருக்கவே நான் விரும்புகிறேன்; விவாகரத்தான நிறைய தம்பதியர், விவாகரத்திற்கு பிறகு எதிரிகளைப் போல் வாழ்கின்றனர்; ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை; செல்வராகவனை எப்போதும் போல் சந்தித்து, நட்பை தொடரவே நான் விரும்புகிறேன். இவ்வாறு சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
Friday, September 17, 2010
சிம்பு படத்தில் சோனியா அகர்வால்
டைரக்டர் செல்வராகவனை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார். இப்போது அவரது
ரீ-இன்னிங்சை தொடங்க சிம்புவின் படம் கை கொடுத்திருக்கிறது. சோனியா அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கும் புதிய படத்தின் பெயர் வானம். தெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த வேதம் படத்தின் தமிழ் ரீமேக் இது. க்ருஷ் இயக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் மனைவியாக நடிக்கிறார் சோனியா.
இந்தப் படத்தின் நாயகனாக சிம்பு நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக பரத்தும் நடிக்கிறார். இவர்களுக்கு இணையான பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். சோனியா அகர்வாலைத் தவிர அனுஷ்கா, சினேகா உல்லால் ஆகியோரும் நாயகியாக நடிக்கிறார்கள். இந்தப் புதுப்பட வாய்ப்பு குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், “வானம் படத்தின் மூலமான வேதம் படத்தை நான் இருமுறை பார்த்து ரசித்தேன். இதில் எனக்கு ஹீரோயின் பாத்திரம் என்று சொல்ல முடியாது. ஆனால் மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ள எனக்கு மறக்க முடியாத படமாக இருக்கும் என நம்புகிறேன். உண்மையில் தெலுங்கில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டபோது என்னை முக்கிய வேடத்தில் நடிக்குமாறு டைரக்டர் க்ருஷ் கேட்டார். ஆனால் அப்போது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளால் நடிக்க முடியவில்லை. இப்போது அதே வாய்ப்பு மீண்டும் கணிந்து வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.
Subscribe to:
Posts (Atom)