Showing posts with label பியா. Show all posts
Showing posts with label பியா. Show all posts

Friday, September 24, 2010

எந்த வேடத்திலும் நடிக்க தயார் : பியா

எந்த வேடத்திலும் நடித்து திறமையைக் காட்டத் தயாராக இருக்கிறேன். இதற்காக தமிழ் இயக்குநர்கள்தான் என்னைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நடிகை பியா கூறினார். தமிழில் பொய் சொல்லப்போறேன், ஏகன், கோவா படங்களில் நடித்தவர். கோவா படத்தில் இவரது நடிப்பு, கவர்ச்சி பெரிதும் பேசப்பட்டது.
தற்போது ஜீவாவுடன் கோ என்ற படத்தில் நடித்து வருகிறார். கோ படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் முடியவுள்ளது.
இதுகுறித்து பியா கூறியதாவது: கோவா படத்தில் எனது நடிப்பை பெரும்பாலானோர் பாராட்டினார்கள்.
இப்போது கோ படம் முடியும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் எனக்கு நல்ல வாய்ப்பை இயக்குநர் கே.வி. ஆனந்த் கொடுத்துள்ளார். அது என்ன வேடம் என்று இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் உடைந்துவிடும். எனவே அதை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதைகளுக்காகக் காத்திருக்கிறேன். ஹீரோயின் வேடம் மட்டுமல்லாமல் எந்த வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதை தமிழ் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. அந்த வேடத்தில் நடிக்கும்போது முழுத் திறமையையும் வெளிப்படுத்தலாம். கதாநாயகி வேடத்தில் வரும்போது ஹீரோவுடன் பாட்டு, அவர் பின்னாலேயே வருவது என்று அமைந்துவிடும்.
ஆனால் வில்லி வேடம் அப்படியல்ல. படையப்பாவில் நீலாம்பரி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தாரே. அந்த வேடம் சிறப்பாக பேசப்பட்டது. அதுபோன்ற வேடத்தை நான் எதிர்பார்க்கிறேன்.
இப்போது வில்லி வேடத்தில் நடிக்க என்னிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதுகுறித்து அறிவிப்பேன் என்றார் அவர்.