Showing posts with label லட்சுமிராய். Show all posts
Showing posts with label லட்சுமிராய். Show all posts

Wednesday, September 29, 2010

கிளாமர் என்பது எந்த தனிப்பட்ட நடிகைக்கும் சொந்தமானதல்ல,


கிளாமர் எந்த தனிப்பட்ட நடிகைக்கும் சொந்தமில்லை என்று லட்சுமிராய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: என்னை பற்றி நிறைய கிசுகிசுக்கள்
வருவதிலிருந்தே நான் பிசியான நடிகையாக இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். டோனி கிரிக்கெட்டில் ஜெயித்ததை பாராட்டினால் கூட செய்தியாகிறது. மும்பையில் சொந்த வீட்டில் தங்கினால் இந்தி பட சான்ஸ் கேட்டு அலைவதாக சொல்கிறார்கள். ஆனால் நான் இதைப்பற்றி கவலைப்பட வில்லை. இப்போது கூட ‘காஸினோ’ என்ற மலையாளப் படத்தில் கிளாமராக நடித்து வருகிறேன். ஒரு மாதம் துபாயில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இன்டர்நேஷனல் கதை என்பதால் ஹாலிவுட் ஹீரோயின் போன்று ஸ்டைலிஷாக நடிக்கிறேன். நீச்சல் உடை, முத்தக் காட்சி, சண்டை எல்லாமே உண்டு. உடனே நயன்தாரா போன்று கிளாமராக நடிக்கிறார் என்கிறார்கள். கிளாமர் என்பது எந்த தனிப்பட்ட நடிகைக்கும் சொந்தமானதல்ல. அழகான நடிகைகள் அனைவருக்கும் சொந்தமானது. தமிழில் ‘மங்காத்தா’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறேன்.