'இரண்டு லட்சத்தில் கூட ஒரு படத்திற்கு இசையமைப்பேன்' என்று மார்தட்டுகிறார்கள் சில இசையமைப்பாளர்கள். (மாரடிக்கிறாங்க என்றும்
வாசிக்கலாம்) ஆனால் இரண்டு கோடியை தாண்டியும் சம்பளம் பேசுகிறார்கள் சிலர். கிட்டதட்ட மூன்றை நெருங்கிவிட்டாராம் ரஹ்மான். கடைசியாக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசி ஒரு படத்தில் சைன் பண்ணியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். (நெஞ்சுக்குள் இருக்கிற ரிதம் பாக்சே உடைஞ்சுபோகிற அளவுக்கு சத்தம் கேட்குமே மற்றவர்களுக்கு?) இந்த இரண்டு கோடி சம்பளம் படியாமல் ஒரு வாரமாக இழுபறியாக கிடந்ததாம் இந்த பேச்சு வார்த்தை. பேசிய சம்பளத்தை குறைக்கவே மாட்டேன். இரண்டுக்கு சம்மதம் என்றால் அக்ரிமென்டோட வாங்க. இல்லைன்னா பிரச்சனையே இல்லை. வேறு யாரையாவது வச்சுக்கோங்க என்று கட் அண்டு ரைட்டாக சொல்லிவிட்டாராம் ஹாரிஸ்.
கடைசியில் அக்ரிமென்ட் போட நல்ல நாளு போவுதே என்று சம்மதித்து அட்வான்சும் கொடுத்துவிட்டதாக கிசுகிசுக்கிறது கோலிவுட் அமைதிப்புறா. இவ்வளவு பெரிய சம்பளத்தை கொடுத்து அவரை புக் பண்ணிய தயாரிப்பாளர் யார் என்பது படத்தின் பெயரை சொன்னால் தெரிந்துவிடப் போகிறது...
No comments:
Post a Comment