8 ஆஸ்கார் விருதுகளை தட்டிச்சென்ற ‘ஸ்லம்டாக் மில்லினியரின்’ அதே டீம், மீண்டும் ஒரு முறை இணைந்திருக்கிறது. முந்தைய படத்தில்
மென்மையான காதலை காட்டிய டேனி பாயல் தற்போது வித்தியாசமான திரைக்கதையுடன் மலை உச்சியில் நடக்கும் திர்ல்லர் கதையை கையாண்டுள்ளார். படத்தின் பெயர் ’127 ஹவர்ஸ்’. இப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் தனக்கு ஆஸ்கார் கொடுத்தது சரிதான் என்ற அளவிற்கு இசை அமைத்து அசத்தியுள்ளார்.
மலை உச்சியில் நடக்கும் இக்கதையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பிரான்கோ கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் அதிக தேடப்பட்டவையாக இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது. டேனி பாயல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி, ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்படம் நவம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வருகிறது.
No comments:
Post a Comment