‘நில் கவனி செல்லாதேÕ படத்தை இயக்குகிறார் ஆனந்த் சக்ரவர்த்தி. இவர் Ôவெண்ணிலா கபடி குழுÕ படத்தை தயாரித்தவர். தமிழ்நாடு & ஆந்திரா எல்லை பகுதியில் இதன் ஷூட்டிங் நடந்தது. குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாதே, மீறி சென்றால் அதோகதிதான் என்ற கருவை கொண்டு படம் உருவாகிறதாம். படத்தில் வரும் காட்சிக்காக மரவீடு ஒன்று உருவாக்கப்பட்டது. ஹீரோயின் தன்ஷிகாவை வில்லன் துரத்தி வர, அவர் ஒளிந்து கொள்ளும் காட்சியை இரவில் படமாக்கி வந்தனர். கட்டைகள் குவிந்திருந்த ஒரு அறையில் தன்ஷிகா மறைந்துகொள்ள, அந்த கட்டைகளை தள்ளியபடி வில்லன் அவரை பிடித்து இழுக்கும் காட்சியை எடுத்தனர். அப்போது சில கட்டைகள் தன்ஷிகாவின் தலையில் விழுந்தது. ÔஆÕ என அலறிய அவர், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாராம். உடனே படக்குழுவினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளியவைத்தார்கள். பின்னர் அவருக்கு ஜூஸ் அளித்தனர். Ôகட்டை மோதிய வேகத்தில் அவரது தலையில் வீக்கம் ஏற்பட்டது. மயக்கம் தெளிந்தும் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகே அவர் பழைய நிலைக்கு திரும்பினார். அப்போதுதான் எனக்கு பதற்றம் அடங்கியதுÕ என்றார் இயக்குனர் ஆனந்த் சக்ரவர்த்தி.
Wednesday, August 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment