உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள மலையாளப் படமான ‘4 ப்ரெண்ட்ஸ் இன்று (அக்டோபர் 28) திரையை தழுவியுள்ளது. சென்னையில் இப்படம் ஆறு
இடங்களில் வெளியாகியுள்ளது.

கிட்டதட்ட 20 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் நடித்துள்ள மலையாளப்படமான ‘4 ப்ரெண்ட்ஸ்ன் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். ‘சாஜி சுரேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுரேந்திரன் ஏற்கனவே இரண்டு வெற்றிப்படங்களை அளித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
மந்திர புன்னகை மலையாளத் திரையுலகில் கமலின், நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான ஜெயராமின் வேண்டுகோளை நிராகரிக்காது கமல் இப்படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா பூஜப்புரா எழுத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Mulakupadam films சார்பாக Tomichan Mulakupadam தயாரித்துள்ளார். பல வெற்றிப் பாடல்களுக்கு இசையமைத்துள்ள M ஜெயசந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப்பிறகு கமல் நடித்துள்ள மலையாளப்படம் என்பதால் உலகநாயகனின் தமிழ் ரசிகர்களும் இப்படத்தை ரசிப்பர் என நம்பலாம்.
No comments:
Post a Comment