Friday, October 22, 2010

த்ரிஷாவை தூக்கிஎறிந்த தெலுங்கு தேசம்





அம்பு எந்தப்பக்கம் எப்போது பாயும் என்று யார் கண்டார்? கொஞ்ச நாட்களாகவே தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அம்பு பாய்ந்து பலத்த
சேதத்திற்குள்ளாகியிருக்கிறார் த்ரிஷா. இந்தியில் உருவாகும் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் உள்ளே நுழைந்தார் எமி. இந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்குள் இன்னொரு அம்பு. இது தெலுங்கு தேசக் கவிழ்ப்பு!
தமிழில் எப்படியோ, அப்படிதான் தெலுங்கிலும் கொடி கட்டி பறந்தார் த்ரிஷா. ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் பிசியாக இருக்கிற வரம் ஒரு சில நடிகைகளுக்குதான் வாய்க்கும். அப்படி தமிழ், தெலுங்கு, இந்தி, மும்மொழிகளிலும் கடை விரித்து முன்னேறியவர் த்ரிஷா! ஆனால் பாலிவுட் மட்டும் போன வேகத்தில் புரட்டிப் போட்டது அவரது நம்பிக்கையை. முதல் படமான காட்டா மீட்டா கடும் தோல்விக்குள்ளானது. அதையடுத்துதான் இவருக்கு பதிலாக எமியை உள்ளே கொண்டு வந்தார் கவுதம்மேனன்.

இதற்கிடையில் தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் இணைவதாக இருந்த த்ரிஷாவுக்கு சில தினங்களுக்கு முன் வந்த தகவல் அவ்வளவு நல்லதாக இல்லை. இந்த படத்திலிருந்து நீங்கள் நீக்கப்படுகிறீர்கள். அட்வான்ஸ் தொகையை திருப்பி கூட தர வேண்டாம். அது உங்களிடமே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்களாம்.
படத்தின் நாயகனான பவன் கல்யாணின் உத்தரவை அடுத்துதான் இந்த கவிழ்ப்பு என்பது புரிந்தாலும், சைலண்ட்டாக இருக்கிறார் த்ரிஷா. பின்னணியில் நடந்ததுதான் என்ன? தெரிஞ்சாதான் சொல்லுவோம்ல....

No comments:

Post a Comment