11 மணியளவில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் விவேக் ஒபராய்க்கு, கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வா-நந்தினி தம்பதிகளின் மகள் பிரியங்காவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மணமகள் பிரியங்கா, லண்டனில் பி.பி.எம். பட்டப்படிப்பு படித்தவர். இவருடைய தாய் நந்தினி ஆல்வா பிரபல நடன கலைஞர்.
விவேக் ஒபராய்-பிரியங்கா திருமணம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. பஞ்சாபி மற்றும் மங்களூர் முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment