Friday, October 22, 2010

மீனாட்சியின் 'கால்' ஷீட்! - பார்த்திபன்

Meenakshi - Parthiban
போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் 'கால்'ஷீட் கிடைச்சிருச்சு என்று பார்த்திபன் சொன்னபோது புரிந்து கொண்டு மொத்த கூட்டமும் சிரிக்க,
புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தது குழந்தை! பாவம் அதற்கெங்கே புரிந்தது தன் கவர்ச்சியை வைத்து பார்த்திபன் அடித்த காமென்ட்டுகள்?
மந்திரப் புன்னகை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த மீனாட்சி, தொடை வரைக்கும் தந்த தாராள தரிசனத்தில் சொக்கிப் போனார்கள் ரசிகர்களும், நிருபர்களும். படத்தின் ஹீரோவும் இயக்குனருமான கரு.பழனியப்பன் பேசும்போது, இந்த ஃபங்ஷனுக்கு எப்படி வரணும்னு நான் மீனாட்சிக்கு போன் பண்ணி சொல்ல சொன்னேன். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் போன் பண்ணி நல்லா டிரஸ் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அப்புறமும் இப்படி... என்ன செய்ய? என்றார்.

ஒருவன் வாழ்க்கையில் மூன்று பெண்கள் வருகிறார்கள். அவர்களால் அவன் வாழ்க்கை என்னவானது என்பதுதான் மந்திரப்புன்னகை கதை என்றார் பழனியப்பன். திரையிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளில் திகட்ட திகட்ட திரவாமிர்தம்! குடி குடியை கெடுக்கும்னு சப் டைட்டில் போட்டுட்டு படத்தை திரையிட்டோம்னா எல்லா சீன்களிலும் பர்மெனன்ட்டா எழுதி வச்சுர வேண்டியதுதான். அந்தளவுக்கு படத்தில குடி காட்சிகள் இருக்கு என்றார் அவர். ஒருவனுக்கு பல முறை காதல் வரும் என்பதுதான் மந்திரப்புன்னகையின் மைய இழை போலிருக்கிறது.

படத்தில் ஒரு வசனம் வருகிறது. "பையன் ஒழுங்கா படிக்காம மக்கா இருந்தான்னா போவட்டும். அவனை சினிமா ஹீரோவாக்கிட்டு போறேன்..." என்று! உங்களுக்கு அப்படியென்ன கோபம் சினிமா ஹீரோக்கள் மீது? பழனியப்பனிடம் வாய் கொடுத்து ஜெயிக்கவா முடியும்? என்னென்னவோ பேசி, "நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை" என்றார் இறுதியாக. அப்படியும் இருக்குமோ என்று குழப்பியடித்தது அந்த பதில்.

No comments:

Post a Comment