
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் இடம்பெற்ற சிரிச்சு சிரிச்சு வந்து சீனா தானா டோய்… பாடலில்
மூலம் அறிமுகமாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரகஸியா. அந்த படத்தை தொடர்ந்து அவர் பல படங்களில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு படத்தில் குத்தாட்டத்தோடு கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் மூணார். படத்தில் ஒரு கொலை நேரில் பார்த்த சாட்சியாக ரகஸியா நடித்திருக்கிறாராம். “இந்த படம் வெளியானால் தனது மார்க்கெட் ரேஞ்சே வேறு” என்று சொல்லும் ரகஸியா, மூணார் படத்தில் நடிப்பதற்காக நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறாராம்
No comments:
Post a Comment