
'அது சரி அண்ணாச்சி... விருதகிரி என்னாச்சு' என்று விஜயகாந்த் ரசிகர்களே முனகுகிற அளவுக்கு படு ஸ்பீடாக(?) வளர்ந்து வருகிறது படம். இந்த
நிலையில் விருதகிரியை தீபாவளிக்கு கொண்டு வருவதா? தேர்தல் நேரத்தில் கொண்டு வருவதா? என்ற குழப்பம் நிலவி வருகிறதாம் கேப்டன் வட்டாரத்தில். இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்றிரண்டுதான். தனுஷ் நடித்த உத்தம புத்திரன், சூர்யாவின் ரத்த சரித்திரா இரண்டும் தவிர அர்ஜுனின் வல்லக்கோட்டை! அப்புறம் பெரிய படம் என்று சொல்லும்படி எதுவுமே இல்லை. இந்த சந்தர்ப்பத்தை விடக் கூடாது என்கிறாராம் தயாரிப்பாளர் சுதீஷ்.
அதிலும் ரத்தசரித்திரா வன்முறை படம் என்பதை சூர்யாவின் ஸ்டில்களே நிருபித்து வருகிறது. (காண்டாமிருக சூப் குடிச்ச மாதிரி எப்பவும் இந்த தம்பி முறைச்சுகிட்டேயிருக்கே என்றார் டீக்கடையில் ஒரு பெரிசு) சென்ட்டிமென்ட், ஆக்ஷன் என்று கலந்து கட்டிய விருதகிரி இந்த நேரத்தில் வெளியிடப்பட்டால் அது ரத்த சரித்திராவை மிஞ்சும் என்பது விருதகிரி படம் தொடர்பானவர்களின் நம்பிக்கை.
ஆனால் படத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் 'பஞ்ச்' அம்மாவையும், ஐயாவையும் ஒரே நேரத்தில் சீண்டுவது போல இருக்கிறதாம். கூட்டணி
Anushka,simbu New Film Vaanam Hot Images
முடிவாகும் முன் இந்த படத்தை வெளியிட்டால் அது தேர்தல் நேரத்தில் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் சற்று தள்ளிப் போடலாம் என்கிறாராம் கேப்டன்.
படம் எப்ப வந்தாலும் கொண்டாட தயாராக இருக்கிறார்கள் தேமுதிகவின் கண்மணிகள். அப்புறம் என்னவாம்?
No comments:
Post a Comment